Total Pageviews

Monday 12 September 2011

நாஞ்சில் நாடு !


தமிழக வரலாற்றில் மூவேந்தர்கள் ஆண்டார்கள். அவர்களுக்குப்பின் குறுனில மன்னர்கள் ஆண்டார்கள். அதன்பின் ஜமீந்தார்களும் பாளையக்காரர்களும் வெள்ளையருக்குக் கீழிருந்து ஆண்டார்கள். 

இப்படிப்பட்ட காலங்களில் தமிழ்மொழியே அனைத்து மக்களும் பேசினாலும், அனைவரும் தனித்தனி நாட்டவர்கள்; தனித்தனி ஜமீனைச் சேர்ந்தவர்கள். ஜமீன்களின் சட்ட ஒழுங்கு முறையில் கீழ் வந்தவர்கள்.  மேலும் ஒரு நாட்டுடன் மற்ற நாடு போர்; ;பகை என்றும் ஒரு ஜமீனும் இன்னொரு ஜமீனும் பகையென்றும் வரலாறு.  மூவேந்தர்கள் ஒருவரையொருவர் அழித்து வாழ்ந்து மார்தட்டிக்கொண்டார்கள்.

இன்று எதுவுமே இல்லை. ஒரே ஒரு மானிலம்தான் அது தமிழ்நாடு.  ஆனால், இன்னொரு மானிலமும் தமிழ்நாட்டுக்குள் இருப்பதாகத் தெரிகிறது. அதன் பெயர் நாஞ்சில் நாடு.  இது நாகர்கோயிலிருந்து களியக்காவரை வரும்போலத் தெரிகிறது.  இங்குள்ள மக்கள் எப்படி நினைக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் இங்கிருந்து வரும் படித்தவர்கள் தங்களை நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவே விழைகிறார்கள்., நாஞ்சில் நாடன், நாஞ்சில் சம்பத், நாஞ்சில் ஜெபா, நாஞ்சில் மனோ, என்று ஒரே நாஞ்சில் மயம்தான்.

சமீபத்தியநாஞ்சில் நாடனின் பதிவில் முன்னாளில் எவரோ ஒருவர் அக்காலத்தில் தங்கள் நாடு எப்படி இருந்தது என்று கழிவிரக்கத்துடன் எழுதியதைப் படித்தவுடன் இவர்கள் ஏன் தங்களைத் தமிழர்கள் என்று நினைக்கவில்லை என்ற கேள்வி எழகிறது. 8 கோடியில் நானும் ஒரு தமிழன் என்று ஒரு பதிவெழுதிய ஒருவரின் பெயர் நாஞ்சில் ஜெபா !

சிவகங்கைச் சீமை, கொங்கு நாடு, தொண்டை நாடு, பாஞ்சாலங்குறிச்சி, எட்டயபுரம் ஜமீன் என்று எல்லாமே போய் விட்டன. இன்று அனைவரும் தமிழ் பேசி தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் என்று மாறிவிட இந்த நாஞ்சில் நாட்டு மர்மம் மட்டும் நீண்டுகொண்டே போகிறதே ஏன்?

2 comments:

Anonymous said...

சார், எட்டு கோடியில் ஒருவன் வலைப்பூ என்னுடையது. அதைப் படித்து கருத்து கூறியதற்கு நன்றி, குமரி மாவட்டத்தை சார்ந்தவர்கள் தங்களை நாஞ்சில் என்று அடை மொழியோடு அழைப்பதைப் பார்த்து நீங்கள் பொறாமை அடைவது ஏன் என்று புரியவில்லை. இதற்கு கீ வேர்ட் ஆக தமிழகம், பிரிவினை என்று கொடுத்திருந்தீர்கள் அது மிகவும் வேதனையைக் கொடுத்தது. எங்கள் வரலாற்றை நாங்கள் நினைவில் கொள்ள சூட்டிக்கொண்ட பேர் தானே ஒழிய வேறு நோக்கம் இல்லை. ஆனால் “சாகித்திய அகடமி” விருது பெற்ற நாஞ்சில் நாடனுடன் என்னையும் சேர்த்து எழுதியது எனக்கு பெருமையாக இருக்கிறது, நன்றி.

காவ்யா said...

சார்

பொறாமை காரணமில்லாமல் வராது. There is no such thing called motiveles malignity. Every malignity has a root cause. என்ன காரணம் பிறருக்கு உங்கள ‘நாஞ்சில் நாட்டுக்காரர்களைக் கண்டு? எனக்குத் தெரியவில்லை!

எல்லாரும் தங்கள்தங்கள் ஊர்களின் பெயரைத்தான் முன்னிட்டுக்கொள்வர். எவரும் ஆதிகாலத்தில் புழங்கிய ஒரு நாட்டின் பெயரைக் கொள்வது கிடையாது. அப்படி அனைவரும் விட்டுவிட்டபடியால் அக்காலத்து நாட்டுப்பெயர்கள் அழிந்தன. இன்று அவைகள் தொடர்ந்திருந்தால் என்னேரமும் பிரிவினை வாதம் வரலாம். அண்மையில் தேர்தலில் போது ‘நாம் கொங்கு நாட்டுக்காரர்கள்’ அரசு நம்மைக்கவனிக்கவில்லை. எனவே தனியாவோம்’ என்று கொங்கு வேளாளர் கட்சி கோரிக்கை வைத்தது நினவிருக்கா?
ஊர்ப்பெயர்களை வைத்துக்கொண்டால் அப்பிரிவினை எண்ணம் முளைக்காது.

தமிழகத்தில் இந்த கன்யாகுமரி மாவட்டத்துக்காரர்களிடம் மட்டுமே இந்த வினோதப்பழக்கம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தோடு இம்மாவட்டம் இணைய ஒரு போராட்டமே நடந்து பின்னர்தான், தேவிக்குளம், பீர்மேட்டை கேரளாவுக்குக் கொடுத்து கன்யாகுமரியை வாங்கினார் காமராஜ்.

வேறு நோக்கம் இன்று இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. பின்னர் வரலாம்.