Total Pageviews

Monday 19 September 2011

மரணங்களில் ஓலமிட்டு அழலாமா ?

கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்து மதம்” என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு பகுதி: (கடைசிப்பகுதி ‘உன்னையே நீ அறிவாய்’ என்ற தலைப்பில்) இங்கு கீழே கொடுக்கிறேன்:
“நம்பிக்கையுள்ளவனுக்கு எந்த்த் துன்பத்திலும் ஒரு நிம்மதி இருக்கும்.
அதாவது, ‘எல்லாம் ஆண்டவனுடைய இயக்கம், நடப்பது நடக்கட்டும்’ என்று துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் சக்தி அவனுக்கு வந்து விடும்.
பிராமண வீடுகளில், ஒருவர் இறந்து போனால், உடனே அந்தச்சடலத்தைத் திண்ணையிலோ அல்லது வெளி வராந்தாவிலோ தூக்கிக்கொண்டு வந்து போட்டு விடுகிறார்கள்.
நான் அறிந்த வரையில், மரணத்திற்காக அவர்கள் அதிகம் ஓலமிடுவதில்லை; கதறி அழுவதில்லை. காரணம், அவர்களுடைய பகுத்தறிவு தெளிவாகச் சொல்லிவிட்ட்து. ‘மரணம் தவிர்க்க முடியாத்து’ என்று.
அந்தச் சமூகத்தில்தான், அறிவாளிகள் அதிகம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.
வைதிக, மத நம்பிக்கையும் அந்தச்சமூகத்தில்தான் அதிகம்.
அவர்கள், இன்ப துன்பங்களைச் சம்மாக்க் கருதுவதைப் பார்க்கும்போது மத நம்பிக்கையுள்ள பகுத்தறிவு வாழ்க்கையை எவ்வளவு நிம்மதியாக ஓட்டிச் செல்கிறது என்பது புரிகிறது.
ஆகவே, ஒவ்வொரு மனிதனுக்கும் மத நம்பிக்கை வேண்டும்.
மனிதன், மனிதனாக வாழ, மத நம்பிக்கை வேண்டும்.  மனிதர்கள் மிருகமாக ஆகாமல் இருக்க, மத நம்பிக்கை வேண்டும்.”


11 comments:

Anonymous said...

அருமை, நன்றாக உள்ளது

Thekkikattan|தெகா said...

அவசர அவசரமாக துண்டு போடுவதில் கொஞ்சம் கூடுதலாக க்ரீடிட்டை அள்ளி வழங்கியிருப்பார். நீங்க இதெல்லாம் படிச்சிட்டு ரென்சன் ஆவாதீங்க :) - விட்டுத்தள்ளுங்க.

வலி அனைவருக்கும் சமமே! 16 வயதில் பள்ளிக்கு செல்லும் ஒரு இளைஞி தற்கொலை செய்து கொண்டால் அப்பொழுதும் சிரித்துக் கொண்டே வழியனுப்பி வைப்பார்களாமா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//மனிதனுக்கும் மத நம்பிக்கை வேண்டும்.மனிதன், மனிதனாக வாழ, மத நம்பிக்கை வேண்டும். மனிதர்கள் மிருகமாக ஆகாமல் இருக்க, மத நம்பிக்கை வேண்டும்.”

சங்காரச்சாரியும்; தேவநாதனும், நித்தியானந்தாவும் மதநம்பிக்கையுடன் செய்த கைங்கரியங்களைக் காணக் , கண்ணதாசனுக்கும் கொடுப்பனவு இல்லை.
சக உறவின் மரணத்தில் வலியை மிருகங்களே உணர்வதைக் கண்டுள்ளேன். விதியே என மனிதன் கவலைப்படாமல் இருக்க முடியுமா?
அதற்கு கற்றிருக்க வேண்டுமா? சுனாமியில் இறந்ததில் பெரும்பான்மை பெரிய கல்வி படைத்தோரின் உறவுகள் அல்ல,
ஆனாலும் அவர்கள் எல்லாவற்றையும் இழந்தும்; நிலை தளரவில்லை.இத்ற்குப் பிராமண சமூகத்தில் பிறக்க வேண்டுமென்பது, சற்று அதீதமான கூற்று.
அர்த்தமுள்ள இந்து மதத்தில் பல கருத்துக்கள் , கண்ணதாசன் மேற்போக்காகக் கூறிச் செல்கிறார்.
கும்பகோணம் தீ விபத்தில் மாண்டது, பெரும்பான்மை பிராமணக் குழந்தைகள், அக்குடும்பங்கள் கதறியது
மறக்கமுடியாது.

இராஜராஜேஸ்வரி said...

மனிதன், மனிதனாக வாழ, மத நம்பிக்கை வேண்டும். மனிதர்கள் மிருகமாக ஆகாமல் இருக்க, மத நம்பிக்கை வேண்டும்.”


நம்பிக்கை பகிர்வுக்கு நன்றி.

மாலதி said...

இங்கு ஒன்றை தெளிவு படுத்த விழைகின்றேன் அதாது கடவுள் மறுப்பாளர்கள் /கவுள் இல்லை என கூறுகிறவர்கள் செய்யும் தவறுகளையும் கடவுள் உண்டு என கூறிக்கொண்டு செய்கிறவர்கள் செய்யும் தவறுகளையும் அருள்கூர்ந்து பட்டியல் இடுக நேர்மைக்கும் கடவுள் கொள்கைக்கும் எள் முனையளவும் உறவு இருக்க வாய்ப்பு மிகவும் குறைவே . எல்லாவற்றியும் விடுங்கள் சட்டமன்றத்திலும் /பாராளுமன்றத்திலும் கடவுள் அல்லது எதாவது ஒரு நம்பிக்கையின் மீது சத்தியம் செய்து விட்டுதான் நேர்மையாக நடப்பேன் என்கிறான் அனால் கொள்ளையடிப்பது யாருக்காக ? அந்த கடவுள் என்ன செய்து கொண்டு இருக்கிறார் ?

வருண் said...

***மனிதன், மனிதனாக வாழ, மத நம்பிக்கை வேண்டும். மனிதர்கள் மிருகமாக ஆகாமல் இருக்க, மத நம்பிக்கை வேண்டும்.”***

எனக்கு கண்ணதாசன் கவிதைகள் பிடிக்கும்! ஆனால் அவரோட இந்த ஸ்டேட்மெண்ட் அபத்தமோ அபத்தம்!

ஏன் என்றால் மதநம்பிக்கை உள்ள மிருகங்களும், மத நம்பிக்கை இல்லா மனிதர்களை நான் என்னுடைய வாழ்வின் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஒரு சில குருடர்கள்தான் இதைப்போல் ஒரு அபத்தமான "ஸ்டேட்மெண்டை"ப்பிடிச்சு தொங்கிக்கிட்டு இருப்பாங்க!

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!

காவ்யா said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

மோகன் மற்றும் தெகா சொன்னவை எதார்த்தம். மரணங்கள் காலமானதும், அகாலமானதும் உண்டு. அகாலமானவவைகளின் போது வாய்விட்டு அழாமலிருக்கமுடியாது. எனினும் காலமானவை - வயது முதிர்ச்சியால் ஏற்படும் மரணங்கள் - அப்படி வீட்டிற்கு வெளியில் சடலங்கள் வைக்கப்பட்டு நான் பார்த்திருக்கிறேன். பிராமணர்களை, வைதீக மதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களின்படி வாழ்கிறார்கள என்ற புனைவைப்பரப்ப கண்ணதாசன் செய்த முயற்சியாகவே கொள்ளலாம்.

வருண், இன்றைய காலகட்டத்தில் பிராமணாளே கண்ணதாசன் சொன்னவைகளை உண்மையென ஏற்பதில்லை. ஆனால் வெளியில் சொல்வது கிடையாது.

இராஜராஜேஸ்வரி, மற்றும் மாலதி நன்றிகள். மததை எப்படிப்ப‌யன்படுததுகிறோம் என்பதைப் பொறுத்தே அது நன்மை பயக்கும். அதற்கு ஒரு மனப்பக்குவம் தேவை.. மதங்கள் இருவகை. ஒன்று தன்னளவில்; இன்னொன்று பொது அளவில். இரண்டாம் வகையே பிரச்சினைகள் உருவாக்கி மதம் என்றாளே பயப்படுமளவுக்கு ஆகி விட்டது என்பது என் தாழ்மையான எண்ணம். முதல்வகையும் கூட தனிநபர் போதையைத்தரும். ஆயினும் முன்மாதிரியாக நடந்து வெற்றிகண்டவர்கள் ஞானிகள். இன்று மதவாதிகள் சமூகத்தில் செய்யும் பிழைகளினாலும், மதத்தைப்பின்பற்றும் பொது மக்களான ஆன்மிகவாதிகள் நடத்தை நமக்கு எரிச்சலையும் கோபத்தையும் தருவதாலும், மதம் ஒரு சமூகச்சீரழிவாகவேப் பார்க்கப்படுகிறது.

ஆனால், கண்ணதாசனைப்போன்றோர் அஃதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். காரணம் அப்படி ஒத்துக்கொளவது ஒரு வியாபாரி தான் விற்கும் பொருளையே குறைசொல்வதாகும். உணமையோ பொய்யோ தன் பொருள் கண்டிப்பாக நல்ல பொருள்..

Unknown said...

''மனிதன், மனிதனாக வாழ, மத நம்பிக்கை வேண்டும். மனிதர்கள் மிருகமாக ஆகாமல் இருக்க, மத நம்பிக்கை வேண்டும்.”

என்ற வரிகள் அர்த்தமுள்ளவை, எனக்குப் பிடித்த வரிகள்

வருண் said...

***வருண், இன்றைய காலகட்டத்தில் பிராமணாளே கண்ணதாசன் சொன்னவைகளை உண்மையென ஏற்பதில்லை. ஆனால் வெளியில் சொல்வது கிடையாது.***

பிராமணாளே???

ஏன் பிராமணாளுக்கு மூளை கெடையாதா? இல்லை, எல்லாருடைய மூளை மாதிரி அவங்க மூளை வேலை செய்யாதா? மழுங்கிப்போயி இருக்கா என்ன?

ஏன் இப்படி அவாள கேவலப்படுத்துறேள்??? You sound like a casteist, kavya! May be you are! I can see that only when you open your mouth and speak more and more!

காவ்யா said...

யாரோ ஒருவர் உங்களைப்பற்றி இல்லாத்தையும் பொல்லாததையும் எழுதுகிறார் என்றால், அதற்கு நீங்கள் என்ன செய்யமுடியும் ? பொல்லாதது என்றால் சண்டைபிடிக்கலாம். இல்லாதது அல்லது தொல்லையில்லாதது என்று வரும்போது பாராமுகமே சிறந்தது. எனவேதான் கண்ணதாசன் எங்களைப்பற்றி சிறப்பாக எழுதி விட்டார் என்று பிராமணாள் சொல்வது கிடையாது. சுருங்கக்கூறின், கண்ணதாசன் எழுத்துகளுக்கு அவரே பொறுப்பு. இல்லையா வருண் ?

வருண் said...

Actually I have to admit that I did not focus on the part "the way brahmins do their funeral or a dead body" and all. I was compltely focusing on only the "religious part".

Now only I see what you meant. It is true KaNNadasan is certainly "bs"ing here. He appreciates them by coming up with his own theory. I really dont know why brahmins throw the body out as soon as someone is dead. May be chettiyaaars (Kannadasan belongs to that caste) also do the SAME.

I know lot of brahmins they dont even want to hear "When I die" or "If I am not alive" or such statements. Of course they are afraid of death like anybody else. They are not ready to face the death anytime as he claims. It is not that the brahmins take it easy as KaNNdasan claims. It is that their tradition or may be for them "dead body" is something "unholy"> it is just like they keep a girl away when she is having her "period". There is NO RATIONAL THINKING behind such things as this guy calims.

You are correct, he just was trying to sell his "crap" by telling bunch of lies just like a businessman does. I agree brahmins might disagree with him! :)