Total Pageviews

Monday 29 August 2011

ஒரு கரைக்கவைக்கும் கவிதை


இவ்வாரத் திண்ணையில் வெளியிடப்பட்ட கவிதை. கவிஞர் அ.இராஜ்திலக் என்பவர்.


                                                       ...




கரைகிறேன்
தண்ணீரில் அழுவதை போன்றுதான்
தனிமையில் நான் அழுவது
என்னைத்தவிர
எவருக்கும் தெரியபோவதில்லை
தண்ணீரில் கண்ணீர்
தன் சுவையிழப்பதை போன்று
தனிமையில் நானும் சுயம் இழந்துவிட
தனிமையும் கண்களும்
தாமரையை இரசிக்க பழகட்டும் .

---- அ.இராஜ்திலக்

Sunday 28 August 2011

குழந்தைகளும் சமூகப்போராட்டங்களும்



அன்னா ஹாஜாரேவின் உண்ணாவிரதப்போராட்ட மேடை குழந்தைகளால் நிரம்பியதுஇன்று (28.8.2011) காலை அவர் உண்ணாவிரதம் ஒரு சிறு குழந்தையால் முடித்துவைக்கப்பட்டது.


குழந்தைகள் வீடுகளில் பெற்றொரின் அன்பரவணைப்பிலும் பள்ளிகளில் கல்வி கற்கவும்தான் செய்ய வேண்டும். அரசியல் சமூகச் சிந்தனைகள் அவரகளுக்குத் தேவையில்லைஇதைக்கருத்தில் கொண்டே பள்ளிப்பாடங்கள் எதையும் அடித்தளத்திலிருந்து அக்குவேறு ஆணிவேறாகப்பிரித்து உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக எழுதப்படுவதில்லை.   10ம் வகுப்பிலிருந்தும் கூட அவர்கள் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் பாடங்கள் எழுதப்படவில்லை. உண்மைகள் உள்ளவாறே அப்படியே சொல்லப்படும்.


ஆனால் ஹசாரே அதைப்பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்காமல் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைத்து விட்டார். அல்லது பெற்றோர்கள் செய்கிறார்கள்வாழ்க்கையில் ஊழல் இருக்கிறது. அதைப்பற்றிப் பள்ளிக்குழந்தைகள் பெரியவர்களானதும் தெரிந்து கொள்வார்கள்டொனேசன் கொடுத்துத்தான் உன்னைப்பள்ளியில் சேர்த்தேன் என்று ஏன் உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டும் ? குழந்தையா அதைச்செய்யச் சொன்னது? உங்கள் தவறுகளால் ஊழல் பெருகி தாங்கமுடியாமல் போனால், அதை எதிர்த்து நீங்கள்தானே போராடவேண்டும் ?



பெரியவர்களும் இளைஞர்களும் கலந்துகொள்ள வேண்டிய அரசியல் சமூகப் போராட்டங்களில் குழந்தைகளைச் சேர்ப்பது அவர்களைப் பிற்காலத்தில் ஒருமுகப்பார்வை கொண்டவர்களாக  ஆக்கவும் தேர்ந்து சிந்தித்துத் தாமாகவே ஒரு நல்ல முடிவெடுக்கும் திறனாளிகளாக உருவாவதை ஆக்காமல் தடுக்கவும் ஏதுவாகும். நம் நாடு ஒரு தீவிர சிந்தனையாளர்களைக் கொண்ட நாடாக மாறும்இப்படிப்பட்ட தீவிரவாதிகள் தங்களுக்குத் தேவையென்றுதானே மதங்கள் குழந்தைகளைச் சிறுவயதிலே மதத்தைப்பற்றிய ஞானத்தைத் திணித்துப் தம்மதமே உயர்ந்தது பிற மதங்கள் வெறுக்கப் படவேண்டும் என்று மதக் கலவரங்களை உருவாக்கி வெற்றி பெற்று வருகின்றன..



மதவுலகத்தில் நடப்பது போல பிறவிடங்களிலும் நடந்து உலகச் சமுதாயமும் நம்மிந்தியச் சமுதாயமும் பாழாய்ப் போகுமென்று தெரிந்தும் தெரிந்தும் அன்னா ஹஜாரே மாதிரி ஆட்கள் இப்படிக் குழந்தைகளை தம் போராட்டத்தில் கலந்துகொள்ள வைக்கலாமா ?



இன்னும் சொன்னப்போனால், இது குழந்தைகளைக் கெடுத்தல் (Child abuse) என்ற குற்றப்பிரிவில் சேர்க்கப்பட்டு இப்போராட்டக்காரர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட‌ வேண்டும்.

                                                                                  ....

Saturday 27 August 2011

இலக்கியவாதிகள்


 

பாவலர்கள் (கவிஞர்கள்), நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் போன்று எழுத்து மூலத்தைக் கொண்டவர்கள் இலக்கியவாதிகள்சிலர் கட்டுரைகளும் வரைவார்கள்.

இவர்கள் தங்கள் இளம் வயதில் எழுதத் தொடங்குகிறார்கள்பின்னர் அவர்களுள் சிலர் விட்டுவிடுவார்கள் வேலை, குடும்பம் என்றாகி விடும்போதுசிலர் தொடர்கிறார்கள்

சிலர் உண்மையிலேயே இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புக்களினால் பேர் பெறுகிறார்கள்சிலர் அரசியலில் நுழைந்து பேர் பெற்று அப்பேரைத் தம் படைப்புக்களைப் பரவலாக்கப் பயன்படுத்துகிறார்கள்சிலர் எதிரும் புதிருமான கருத்துக்கள வெளியிட்டு ஒரு நெக்ட்டிவ் பப்ளிசிட்டியைபெற்று தம்மை அறிமுகப்படுத்துக்கொண்டு நிலைக்கிறார்கள்சிலர் பாடல்களின் பெருந்தத்துவங்களை அழகு தமிழில் சொல்லித் தன் ஆளுமையையும் அப்பாடல்களில் சொன்னது போல இருக்கும் என்பதாக மக்களை மயக்குகிறார்கள். இவர்களில் திரைப்பட பாடலாசிரியர்கள் உண்டுஇவர்கள் திரைப்படக் கதாநாயகர்களைப் போல புகழ் பெறுகிறார்கள்

இன்று இவர்களில் சிலர் வலைப்பதிவுகளில் எழுதுகிறார்கள். தாங்களாகவே வலைபதிவுகளைக் கணணி வல்லுனர்களின் மூலம் அட்டகாசமாக வடிவமைத்து  எழுதி வருகிறார்கள்ஏற்கனவே இவர்களில் இரசிகர்கள் இங்கே குழுமுகிறர்கள்ஒரு 'கல்ட்' உருவாக்கப்படுகிறதுஇரசிகர்கள் இவர்களின் ஒவ்வொரு பதிவையும் விழுந்துவிழுந்து படிக்கிறார்கள்ஆதரிக்கிறார்கள். பதிவை எதிர்ப்போரை அடியாட்கள் போல நின்று தாக்குகிறார்கள்.

இதெல்லாம் பரவாயில்லை. இவ்வெழுத்தாளர்கள் தங்கள் பாப்புலாரிட்டியப் பயன்படுத்தி நச்சுக்கருத்துக்களை ஒரு சார்பு நிலையைப் போற்றியும் இன்னொரு சார்புனிலையை இகழ்ந்தும் எழுதுகிறார்கள். இரசிகர்களின் சிந்தனையை ஓர்வழிப்படுத்துகிறார்கள். (radcalisation)

இவர்களே இன்றைய இலக்கியவாதிகள்எனினும் அங்கங்கே சில நல்ல புதினங்கள் வருகின்றன. அவை மேலே சொன்ன அரசியல்வாதி போன்ற எழுத்தாளர்களிடமிருந்தும் உண்டு.

இலக்கியவாதி ஒரு சாதாரண மனிதன்தான்அழுக்குகளும் ஆபாசங்களும் நிறைந்தவன்தான். இவனுக்கு ஏன் கோயில் கட்ட வேண்டும்? படிப்பவர்கள் அவற்றைமட்டும் படித்துவிட்டு படைப்பாளிகளுக்குக் கோயில் கட்டுவது நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் கோயில் கட்டுவதைப்போன்றதே.

இந்த உணர்ச்சிவசப்படல் தமிழரின் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது. தமிழரின் இந்த அடிப்படைக்குணத்தை எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள்  பயன்படுத்தி வாழ்ந்து கொழுக்கிறார்கள்.

எல்லாரையும் தன்னைச்சுரண்டி கொழுக்கவைக்க ஏன் தமிழர் தன்னைப் பலி கொடுக்கிறார் ?



Friday 26 August 2011

தமிழ்ப்புத்தாண்டு - பிரச்சினை

தமிழ்ப்புத்தாண்டு தியதி மாற்றத்தைப்பற்றி ஒரு பதிவில் நான் எழுதியவை:


கேள்வி: இந்துக்களின் பஞ்சாங்கத்தில் அவர் கைவைக்க என்ன உரிமை கருனானிதிக்கு ? தைரியம் இருந்தால் மற்ற மதங்களின் நாட்காட்டிகளில் போய் கைவைக்கட்டுமே. வெட்டிவிடுவார்கள்.
                                                                       <-------->


களுக்கென்றாலும் அது அவர்களுக்கும் பிராமணர்களுக்கும் சேர்த்தே. இந்துக்கள் புத்தாண்டு என்றிருக்க வேண்டும். கருனானிதி இந்துக்கள் புத்தாண்டில் கை வைக்கவில்லை. தமிழர் புத்தாண்டைத்தான் தமிழர்கள் பஞ்சாஙகப்படி மாற்றினார்!
வேண்டுமென்றால் பிராமணர்கள் தாங்கள் தனியாக சித்திரை 1 யே புத்தாண்டாகக் கொண்டாடட்டும். அப்படித்தான் செய்தும் வருகிறார்கள். அதை எவரும் தடுக்கவில்லை. தனியாகப்பூணுல், தனியாக வடமொழி மந்திரங்கள் என்று நீங்கள் இருப்பதை யாரும் தடுக்கவில்லை. இருந்துவிட்டுப்போங்கள். ஏன் , தமிழர்களுக்கென்று இருக்கும் கலாச்சாரத்தில் தலையிடுகிறீர்கள் ?

இசுலாமியரும் கிருத்தவரும் எங்கள் மதப்பஞ்சாங்கத்தில் இன்ன தேதிதான் புத்தாண்டு. இதைத்தான் எல்லாத் தமிழர்களும் ஏற்க வேண்டும் இதுவே தமிழ்ப்புத்தாண்டு என்றார்களா ? இல்லை.

உங்கள் பஞ்சாங்கம் வேறு. அது பிராமணப்புத்தாண்டு சித்திரை ஒன்று. எங்கள் பஞ்சாங்கத்தின் படி தை ஒன்றுதான் புத்தாண்டு. உங்கள் மீது நாங்கள் திணிக்கவில்லை. எங்கள் மீது திணிக்காதீர்கள். ஜெயலலிதா என்ன பிராமணருக்கு மட்டுமா முதலமைச்சர் அவாளுக்கு வேண்டியதைத் தமிழர்கள் கலாச்சாரம் என்று பொய்சொல்ல ?

தமிழர்கள் என்றால் பிராமணர்கள் எழுதிய பஞசாங்கத்தை ஏற்றுக்கொண்ட இந்துக்கள் மட்டுமா ? கிருத்துவர்கள் முசுலீம்க்ள் மற்றும் பலர் எல்லாம் சேர்ந்துதானே தமிழர்கள் ?

சித்திரை ஒன்றாம் தியதி இந்துக்கள் புத்தாண்டு? ஓகே. அது எல்லாத்தமிழர்களுக்கும் சேர்த்து தமிழர் புத்தாண்டாக எப்படி ஆகும் ?


சொல்பவர் ரம்மி: சித்திரை நாள் கொண்டாடுவது பிராமனீயம் எனில், எந்த வடநாட்டுப் பண்டிகைகளும் இங்கு தடை செய்யலாமே! கூடுதலாக அந்நிய தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்நிய மத பண்டிகைகளையும்!

பதில்: உங்களுக்கு நான் சொல்வது புரிபடவில்லை.
சித்திரை ஒன்றை இந்துக்கள் பண்டிகையாக கொண்டாட யாரும் தடுக்கவில்லை. அதை அனைத்து இந்துக்களும் பிராமணப்பஞ்சாங்கத்தை ஏற்றுக் கொண்டாடி வருகிறார்கள். தமிழகரசு தை ஒன்றாம் தியதிதான் புத்தாண்டு என்றாலும் இந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் சித்திரைதான்.

பிரச்சினை எங்கென்றால், சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டு எனச்சொல்ல வேண்டும் எனபதுதான். தமிழர்கள் என்றால், பிராமணரும் மற்ற இந்துக்களும் மட்டும்தானா ? கிருத்துவர் இசுலாமியர் தமிழரில்லையா ? அவர்கள் ஏன் ஒரு இந்துப்பண்டிகையைப்போய் தமிழ்ப்புத்தாண்டு என ஏற்றுக்கொள்ள வேண்டும் ? தமிழரறிஞரகள் காட்டும் நாளை ஏற்றுக்கொள்வதற்கு, இசுலாமியருக்கும் கிருத்துவருக்கும் ஏன், உங்களுக்கும்கூட தடையிருக்காதல்லவா ?

அன்னிய தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்ப்பட்ட பண்டிகைகளை அந்தந்த மதத்தினர்தானே கொண்டாடுகிறார்கள் ? ரம்ஜான் இந்துக்கள் கிருத்துவர்கள் மீது திணிக்கப்படுகிறதா ? கிருஸ்துமஸ் உங்கள் மீதோ, இசுலாமியர் மீதோ திணிக்கப்படுகிறதா ? இவற்றுள் எவையேனும் தமிழர் திருநாள் என்று திணிக்கப்படுகிறதா ? இல்லையே ?

அப்படியிருக்க, ஏன் இந்த இந்துப்பண்டிகையான சித்திரை 1 அனைத்துத் தமிழர்கள் மீது திணிக்கப்படவேண்டும் ? இதற்கு ஏன் அரசு துணை போக வேண்டும் ?


சொல்பவர் டோண்டு: நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சித்திரை முதல் தேதிதான் பாரம்பரியமாக தமிழர் புத்தாண்டு.
மதத்திலிருந்து அதை பிரிக்கவியலாது. அதிலும் இந்துக்களை திருடர்கள் என்று சொன்ன பெருந்தகைகள் அதை செய்யக் கூடாது.
தை முதல் தேதி கூட சங்கராந்தி என்னும் பொங்கல். அதுவும் இந்து பண்டிகையே. கோமாளித்தனமாக மார்றியவர்களுக்கு ஒரு தகுதியும் இல்லை, அவ்வளவே.

பதில்: கரெக்ட். தை முதல் நாளும் இந்துக்களின் பண்டிகை. பொங்கலும் சித்திரை முதனாளும் தமிழர்களுக்கு பொதுவான பண்டிகை நாளாக எடுக்கக்கூடாது. எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் இந்துக்கள் கொண்டாடத்தான் போகிறார்கள். தமிழ் இசுலாமியர்களும் கிருத்துவரும் பொங்கலை - அது தமிழர் திருனாள் என்று சொல்பவர் சொன்னாலும் - கொண்டாடுவதில்லை.

அரசு இவ்விரண்டு நாட்களையும் இந்துகளிடமே கொடுத்துவிட்டிருக்கலாம். தமிழறிஞர்கள் என்றால் அவர்களும் இந்துக்களே. கருனானிதி சொல்லும் அந்த அறிஞர்களில் எவரும் இசுலாமியரோ கிருத்துவரோ இல்லை. எனவே அவர்கள் கூற்றும் மதம் சார்ந்ததே.



அரசு இந்துக்களுக்கு மட்டும்தான் தமிழ்நாட்டில் என்பது தெரிகிறது: அது கருனானிதியானாலென்ன ஜெயலலிதாவனாலென்ன ?   Pseudo-secularism !
சொல்பவர் பெரியார் என்ற பெயரில் எழுதுபவர்  தமிழர்கள் என்றால் வெள்ளை தாடியின் வீண் திராவிடம் பேசி பிரிவினை வளர்க்கும் கருப்பு சட்டை வெறியர்களும் தி மு சொறியர்களும் தானா?காலம் காலமாக கடை பிடிக்கப்படும் வழக்கத்தை மாற்ற இந்த மூஞ்சிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?


சொல்பவர் விருட்சம்: தை முதல் நாளை இந்துக்கள் அல்லாதோர் உழவர் திருநாள் என்றோ அறுவடை திருநாள் என்றோ கொண்டாடுகிறார்களா? அதுவும் பொங்கல் பானை வைத்து சூரியனை தொழுது இந்துக்களால் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே ஒரு காரணத்துக்காக கொண்டாடப்படும் பண்டிகைக்கு எத்தனை காரணங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தானே.  அதற்கு சித்திரையை கொண்டாடக் கூடாது என்று சொல்ல என்ன அவசியம்? 
தை முதல் நாளை தமிழர் திருநாளாக நாங்கள் கொண்டாட விரும்புகிறோம் அதற்கு ஒரு அரசாங்க தீர்மானம் வேண்டும் என்று இந்துக்கள் அல்லாதோர் யாராவது போராடினார்களா அல்லது அறிக்கை விடுத்தார்களா ? அப்படி யாராவது விரும்பினால் அதற்கு அரசு வந்து கொண்டாடித் தர வேண்டுமா என்ன ? எல்லோரும் கொண்டாடத் துவங்கினால் தானாக அது பழக்கமாக மாறி விடாதா? பிறகு யார் தடுக்க முடியும்? தை முதல் நாளை விளக்கு ஏற்றி தமிழ் புத்தாண்டாக கொண்டாட விடுக்கப் பட்ட அழைப்புக்கு சென்ற ஆண்டுகளில் எத்தனை இந்துக்கள், இந்துக்கள் அல்லாதோர் வீட்டில் இருந்து விளக்கேற்றி ஆதரவு அளிக்கப்பட்டது ?

அப்புறம் எதுக்கு இந்த வீண் விதண்டாவாதம்?தமிழர்கள் கொண்டாடலாம் என்று அனுமதி அளிக்கப்பட பண்டிகைப் பட்டியலைக் கொஞ்சம் தந்தா தெரிஞ்சு புரிஞ்சு நடந்துக்கலாம்.  இது என்ன இரணிய ராஜ்யமா, நாராயணன் நாமத்தை சொன்னால் சிரச்சேதம். என் நாமத்தை தான் சொல்ல வேண்டும் என்று சொல்ல?  ஜனநாயகம் என்பது மக்களின் விருப்பத்தை மதிப்பது. சித்திரை, தை முதல் நாள் தினங்களில் தமிழர்கள் வீடுகளில் சென்று பார்த்து யார் கொண்டாடுகிறார்கள் என்று கணக்கெடுத்து பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.

பதில்:  சித்திரையை தமிழ்ப்புத்தாண்டாகக்
கொண்டாடுபவர்கள் தடுக்கப்படவில்லை. கருனானிதி என்ன சொன்னாலும் அதைத் தமிழ்ப்புத்தாண்டாகத்தான் தமிழ் இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். கொண்டாடுவார்கள். அதுவல்ல என் பிரச்சினை. சித்திரை ஒன்று அல்லது தை ஒன்றை ஏன் அரசு தமிழ்ப்புத்தாண்டு என அறிவிக்க வேண்டும் ? கருனானிதி செய்வாராம். ஜெயலலிதா மாற்றுவாராம். இவர்கள் வெல் டன் என்பார்களாம். ஏன் இந்த வேலையத்த வேலை ஒரு மதம்சாரா அரசுக்கு ? தமிழர்கள் என்றால் இந்துக்கள் மட்டுமா ?  தமிழ்நாட்டில் வாழும் கிருத்துவரும் இசுலாமியரும் தமிழர்கள் இல்லையா ? அவர்கள் ஏன் தமிழ்ப்புத்தாண்டை பிராமணப்பஞ்சாங்கத்தின் படி ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? என்பதுதான் என் கேள்வி. உடனே கிருத்துவரும் இசுலாமியரும் அன்னியர்கள் என்று விடாதீர்கள். அவர்கள் தமிழர்கள் அன்னிய மதங்களை ஏற்றுக்கொண்டவர்கள். எப்படி தமிழ்நாட்டில் வாழும் இந்துக்கள் அன்னிய மதமான வைதீக மதத்தை ஏற்றுக்கொண்டார்களோ அப்படி.
இன்னொரு கேள்வி: இந்துக்கள் என்றால கட்டாயமாக பிராமணப்பஞ்சாங்கத்தை மட்டும் ஏற்றுக்கொண்டால்தானா ? ஏன் அவர்கள் கருனாணிதி அல்லது கருனானிதி சொல்லும் தமிழறிஞர்கள் சொன்னப் பஞ்சாங்க முறைப்படி தை 1 ஏற்றுக்கொண்டவர்களாக இருக்ககூடாது? தமிழறிஞர்கள் சொன்னதென்னவென்றால், தமிழர்களுக்கென்ற பஞ்சாங்கம் தமிழகத்தில் வரையப்பட்டது. அதன்படி தை 1யே தமிழ்ப்புத்தாண்டு. சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக வரைந்தவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் அல்ல. அன்னியர்கள். அது வைதீக முறைப்படி வடநாட்டில் வரையப்பட்டது. வைதீக முறைகள் வடவிந்தியாவில் இருந்து தமிழகம் வந்தவையே. வைதீக மதம் தமிழ்நாட்டு மதமல்ல. அது கிமு ஒன்றிலேயே வந்துவிட்டது என்று சொல்லிவிட்டால் அது தமிழர்கள்தான் படைத்தார்கள் என்றாகுமா ? பேண்டு சட்டையை நூறாண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் அணிந்து வருகிறார்கள். உடனே அது தமிழரின் உடையென்று சொல்லிவிடுவோமா ? சல்வார் கம்மீசை எல்லாரும் அணிகிறார்கள். இன்னும் ஒரு 100 ஆண்டுகளுக்குப்பின் அது தமிழ்ப்பெண்களில் உடையே எனச்சொல்லிவிடுவீர்களா ?இரு திணிப்பு வேலைகள் இங்கே:

1.
அரசு இந்துக்கள் பண்டிகைகளை - பொங்கல், சித்திரை ஒன்று - எல்லாத்தமிழர்கள்மேலும் திணிப்பது.

2.
வைதீகப் பிராமணர்கள் தங்கள் பஞ்சாங்கத்தை எல்லாத் தமிழர்களின் மீது திணிப்பது.


சொல்பவர் டோண்டு: “கருணாநிதி அரசு கோவில்களுக்கும் ஆணை பிறப்பித்தது, சித்திரை முதல் நாளை புத்தாண்டாக அறிவித்து பூஜைகள் செய்யக்கூடாது என்று.
எது எப்படியானாலும் ஒரு பாரம்பரியத்தை மாற்ற நினைக்கும் முன்னால் பல முறை யோசிக்க வேண்டும். இந்துக்களை திருடர்கள் எனக்கூறிய பெருந்தகைக்கு அந்த யோசனைகள் எல்லாம் இருந்திருக்க முடியாது.


பதில்: தொன்மை, பாரம்பரியம் என்பதெல்லாம் ஒரு தவறைத் தொடர்ந்து செய்ய பயன்படுத்த உதவும். தகுதி உள்ளவந்தான் அத்தவறைச் சரி செய்யவேண்டும்பென்பதும் அத்தவறை அப்படியே விடுவதற்கு ஏதுவாகும்.  கருனானிதி இந்துக்களைத் திருடன் எனச் சொன்னதால் தகுதியில்லெய்ன்றால், வெள்ளைக்காரன் இந்தியர்களைக்காட்டுமிராண்டிகள். இவர்களுக்கு நாம்தான் நாகரிகம் கற்றுக்கொடுக்கவேண்டும். ஆங்கில வழிக்கல்வியே அதற்குச் சரியென்றான். அவன் இந்துக்கள் பழக்கங்களை நிறைய மாற்றினான். உடன்கட்டையேறுதல் ஒரு .ம்
அவன் தகுதியானவனா ?
அவர் செய்த தவறை ஜெயலலிதா சரி செய்தார். அவ்வளவே.

உடன்கட்டையேறுதல் தொன்று தொட்டுவரும் ஒரு பாரம்பரியம் அதில் தலையிடக்கூடாதென்றார்கள். ஆனால் வெள்ளைக்காரன் விடவில்லை.
விட்டிருந்தால், இன்றும் பெண்களை எரித்துக்கொன்று கொண்டிருப்பார்கள்.  எனவே தொன்மை, பாரம்பரியம், இன்னார்க்குத்தான் தகுதி என்பதெல்லாம் சால்ஜாப்புக்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்ய.
மக்களின் ஏகோதிபித்த அனுமதியைப்பெற வேண்டுமென்பதும் முழுக்கச்சரியல்ல. மக்கள் என்றுமே கன்செர்வேட்டிவ்கள்தான். அவர்கள் தொன்மையையும் பாரம்பரிய பழக்கவழக்கங்களையும் என்றுமே போற்றிப்பாதுகாப்பார்கள் தவறேயென்றாலும்.
உலகில் நடந்த சமூக,மத, கலாச்சார சீர்திருத்தங்கள் மக்களின் ஆதரவோடு நிகழ்ந்தவை இல்லை. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்து வெற்றிகொண்டே நிகழ்ந்தவை.   இந்து மதத் தொன்மங்கள் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் எல்லாம் பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்டவை. தமிழகத்திலும் அப்படித்தான். எனவே அவர்கள் எதிர்க்கிறார்கள்.