பாவலர்கள் (கவிஞர்கள்), நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் போன்று எழுத்து மூலத்தைக் கொண்டவர்கள் இலக்கியவாதிகள். சிலர் கட்டுரைகளும் வரைவார்கள்.
இவர்கள் தங்கள் இளம் வயதில் எழுதத் தொடங்குகிறார்கள். பின்னர் அவர்களுள் சிலர் விட்டுவிடுவார்கள் வேலை, குடும்பம் என்றாகி விடும்போது. சிலர் தொடர்கிறார்கள்.
சிலர் உண்மையிலேயே இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புக்களினால் பேர் பெறுகிறார்கள். சிலர் அரசியலில் நுழைந்து பேர் பெற்று அப்பேரைத் தம் படைப்புக்களைப் பரவலாக்கப் பயன்படுத்துகிறார்கள். சிலர் எதிரும் புதிருமான கருத்துக்கள வெளியிட்டு ஒரு நெக்ட்டிவ் பப்ளிசிட்டியைபெற்று தம்மை அறிமுகப்படுத்துக்கொண்டு நிலைக்கிறார்கள். சிலர் பாடல்களின் பெருந்தத்துவங்களை அழகு தமிழில் சொல்லித் தன் ஆளுமையையும் அப்பாடல்களில் சொன்னது போல இருக்கும் என்பதாக மக்களை மயக்குகிறார்கள். இவர்களில் திரைப்பட பாடலாசிரியர்கள் உண்டு. இவர்கள் திரைப்படக் கதாநாயகர்களைப் போல புகழ் பெறுகிறார்கள்.
இன்று இவர்களில் சிலர் வலைப்பதிவுகளில் எழுதுகிறார்கள். தாங்களாகவே வலைபதிவுகளைக் கணணி வல்லுனர்களின் மூலம் அட்டகாசமாக வடிவமைத்து எழுதி வருகிறார்கள். ஏற்கனவே இவர்களில் இரசிகர்கள் இங்கே குழுமுகிறர்கள். ஒரு 'கல்ட்' உருவாக்கப்படுகிறது. இரசிகர்கள் இவர்களின் ஒவ்வொரு பதிவையும் விழுந்துவிழுந்து படிக்கிறார்கள். ஆதரிக்கிறார்கள். பதிவை எதிர்ப்போரை அடியாட்கள் போல நின்று தாக்குகிறார்கள்.
இதெல்லாம் பரவாயில்லை. இவ்வெழுத்தாளர்கள் தங்கள் பாப்புலாரிட்டியப் பயன்படுத்தி நச்சுக்கருத்துக்களை ஒரு சார்பு நிலையைப் போற்றியும் இன்னொரு சார்புனிலையை இகழ்ந்தும் எழுதுகிறார்கள். இரசிகர்களின் சிந்தனையை ஓர்வழிப்படுத்துகிறார்கள். (radcalisation)
இவர்களே இன்றைய இலக்கியவாதிகள். எனினும் அங்கங்கே சில நல்ல புதினங்கள் வருகின்றன. அவை மேலே சொன்ன அரசியல்வாதி போன்ற எழுத்தாளர்களிடமிருந்தும் உண்டு.
இலக்கியவாதி ஒரு சாதாரண மனிதன்தான். அழுக்குகளும் ஆபாசங்களும் நிறைந்தவன்தான். இவனுக்கு ஏன் கோயில் கட்ட வேண்டும்? படிப்பவர்கள் அவற்றைமட்டும் படித்துவிட்டு படைப்பாளிகளுக்குக் கோயில் கட்டுவது நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் கோயில் கட்டுவதைப்போன்றதே.
இந்த உணர்ச்சிவசப்படல் தமிழரின் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது. தமிழரின் இந்த அடிப்படைக்குணத்தை எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் பயன்படுத்தி வாழ்ந்து கொழுக்கிறார்கள்.
எல்லாரையும் தன்னைச்சுரண்டி கொழுக்கவைக்க ஏன் தமிழர் தன்னைப் பலி கொடுக்கிறார் ?
No comments:
Post a Comment