தேவராஜ் விட்டலன், பெரியார் தளம், மற்றும் புதிய தென்றல் - இவர்களில் பதிவுகள் தொடர்ந்து முன்பக்கம் தெரிகின்றன. விட்டலனின் பதிவு "ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்", 15 நாட்களுக்கு மேலாக இருந்த இடத்திலேயே தெரிகிறது. இதைப்பற்றி நான் ஏற்கனவே எழுதியாயிற்று. டோண்டு ராகவன் என்றொரு பதிவாளரும் சொல்லிவிட்டார். இதை இவர்கள் எப்படி செய்கிறார்கள் ?
இவர்கள் கணனி நுட்ப திறமையைப் பயன்படுத்தி தங்கள் பதிவை எப்போதும் தமிழ்மணத்தில் நாள்தோறும் தோன்றும் வண்ணம் செய்து வருகிறார்கள். அவர்களில் பதிவு தொடர்ந்து பல நாட்களாக புதிய பதிவுகளில் நடுவிலேயே நின்று கொண்டேயிருக்க,. மற்றவர்களின் பதிவுகளோ தோன்றி புதுப்பதிவுகளால் கீழே தள்ளப்பட்டு ஆர்க்கைவுக்குச் சென்று விடுகின்றன. .
தமிழ்மணம் எல்லாப் பதிவர்களுக்கும் சமமானது என்பதை இப்படிப்பட்ட பதிவர்கள் தகர்க்க நினைக்கிறார்கள இவர்கள் தமிழ்மணத்துக்குச் சவால் விடுவதாகவே எனக்குத் தெரிகின்றது.

4 comments:
தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா...
கவனித்த மாதிரி தெரியவில்லை !
அவை கட்டணப் பதிவுகள் என தமிழ்மணம் இறுதியாகக் கூறிவிட்டது. அது பற்றிய எனது பதிவு இதோ:
http://dondu.blogspot.com/2011/09/blog-post_30.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழ்மணத்தின் இப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இதோ:
பார்க்க: http://blog.thamizmanam.com/archives/351
//ஒவ்வோர் இடுகையையும் எங்களாலே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் இவ்விடத்தில் பதிவர்களும் பயனர்களும் இருகண்களாக இருந்து தெரிவிக்கக் கோருகிறோம். தமிழ்மணத்தின் சிறப்பிற்கு டி.எம்.ஐ நிர்வாகக் குழுவினர் மட்டுமன்றி, பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் காரணமே.//
அதைத்தான் நானும் காவ்யாவும் விட்டலன் போன்றவர்கள் விஷயத்தில் செய்தோம்.
நான் கேட்டுக் கொண்டபடி அம்மாதிரியான விளம்பரப் பதிவுகள் அதற்கான ஏதேனும் ஓர் அடையாளத்துடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் யாரேனும் நிஜமாகவே தில்லாலங்கடி வேலை செய்து தமது பதிவை முகப்புப் பக்கத்திலேயே நிலைக்கச் செய்தால், நான் அவை விளம்பரப் பதிவாக இருக்கலாம் என்னும் சந்தேகத்தின் பலனாய் ஒன்றுமே கூறாது விட்டுவிடும் வாய்ப்பு உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment