Total Pageviews

Saturday 31 December 2011

தமிழ் வலை பதிவர்களின் கூடல்களும் ஊடல்களும் !



ஈரோடு வலைபதிவர்கள் அண்மையில் நடாத்திய ஒரு கூட்டத்தைப்பற்றி சில எதிரும் புதிருமான பதிவுகள் தமிழ்மணத்தில் வெளியாகி வருகின்றன.  இதற்கு முன் சென்னையிலும் இப்படிப்பட்டக் கூட்டங்கள் நடந்ததாகப் படித்ததுண்டு.

படித்த பின்  தோன்றுவது என்னவெனில்,  ஆயிரக்கணக்கணக்கில் பதிவர்கள் வெவ்வேறு விடயங்களில் பதிவுகள் எழுதிவர, அவற்றில் தமிழ்மணத்தில் வரும் பதிவர்கள் கூடலாகத்தான் இவையிருக்கின்றன.  ஆண்களாலே நடத்தப்படுகின்றன.  பெண்கள் சிலர் போயிருப்பினும் கூட‌ இவைகளில் ஒரு 'ஆண்தனம்' மே மேலிடுகிறது 

ஆணாதிக்கம் இருப்பது தேற்றம். அவர்கள் செயலகள்,  பெண் பதிவர்களை அப்பக்கமே போகவிடாமல் செய்வதாக இருக்கிறது. குடியைப்பற்றி அலாதியாகப்பேசப்படுவதிலிருந்து ஒரு தமிழ்மகன் என்றால் குடிகாரந்தான் போலும் என்ற நினைப்பே வருகிறது.

பெண்களின் அங்கங்களைப்பற்றியும் பெண்களின் அரைநிர்வாணப்படங்களைப்போட்டு அசிங்கமான தமிழில் பதிவை எழுதுவதும், எப்பெண்ணை எப்படிக் கவருவது என்று பதிவு நாளுக்கொன்றாக எழுதும் இவர்கள் கூடும் கூட்டத்தில் பெண்கள் சேர முடியுமா என்ற கேள்வி எழுகிறது.  ஒரு பதிவர் ஆபாசமான தமிழில் பதிவெழுதுகிறார்.  இவர்கள் பதிவுகள் தமிழ் மொழிக்கே கேடு. கேட்டால் நான் தமிழ்ப்புலவரில்லை; தமிழை வளர்க்கவும் எழுதவில்லை என்கிறார். சரி. மறுக்கவில்லை. ஆனால் உம்மை தமிழை ஆபாசமாக எழுதச்சொன்னது யார்? 

இது தமிழுக்கும் தமிழ் வலைபதிவுல வளர்ச்சிக்கும் நல்லதன்று.

பெண்பதிவர்கள் கூடல்கள் என்று இருப்பது அவசியமாகிறது.  அவர்கள் பல பொது விடயங்களைப்பற்றியெழுதினாலும், பெண்பாலார் விடயங்களையும் எழுதுவதால், அஃதை அவர்கள் மட்டுமே செய்யமுடியும் என்பதாலும் அவர்களுக்கென பதிவர் கூட்டத்தை அவ்வப்போது நடத்துவது தமிழுக்கு நன்று.


 
If no one among the Tamil women bloggers comes forward to convene such a meet for them occasionally, I would suggest that organisations like Tamil Manam aggregator may themselves help organise such meets and give wide publicity to the convention and its deliberations.  There, it should be ensured, all sorts of male bloggers, in particular those obscene bloggers who glorify womanising and drinking should be strictly shown the door !

 

No comments: