Total Pageviews

Tuesday, 29 November 2011

அம்மா நல்லவள்


தமிழ்க்கவிதை. I am not a poet. However, sometimes, I am provoked to write something as a reaction, and this time, I chose the form of Tamil poetry to react against the blogpost about Children’s day celebration in A.R.Rajagopalan’s Ayutha ezhuthu blog.  The poem I have sent to the blog is appended below: Children's day is gone, only to come back and haunt children like these.

குழந்தைகள் நாள் வந்தது.
அம்மா சொன்னாள்: “போ. கட்டக்கடைசியில் மிட்டாய் கொடுப்பார்கள்
போனேன்:
சரசரவெனப்பட்டுப்பாவாடைகள்;
கைநிறையப் பலூன்கள்;
புதிய கால்சட்டைகள்;
பளபளக்கும் சட்டைகள்.
என்னைப்போன்ற சிறுவர்களும் சிறுமிகளும்.
வயதில் மட்டுமே.
ஆனால் அவர்கள் வேறு.
கலர்கலரான கார்களில்
அப்பாக்கள் அம்மாக்கள்.
அழகாக இருந்தார்கள்.
குழந்தைகள் இறங்கினர்.
அவர்களுக்கான திண்பண்டங்கள் விற்கும் கடைகள்.
குழந்தைத்தொழிலாளர்கள் சப்ளை செய்தார்கள்.
மினரல் வாட்டர் கொண்டுவந்தார்கள்.
குழந்தைகள் குதூகலித்தார்கள். குடித்தார்கள் பெப்சிக்களையும் கோலாக்களையும்
கோலாக்களை அறைவாசியாக உறிஞ்சிவிட்டு
அடுத்து லேக்குப்போனார்கள்.
என்னால் அவற்றை எடுக்கமுடியவில்லை.
அம்மா திட்டுவாள்.
அம்மா என்னைக் குழந்தைத் தொழிலாளார்களுள் ஒருத்தியாகத் தடுத்துவிட்டாள்.
சொன்னாள்; அவர்கள் கொஞ்சமாத்தான் கூலி கொடுப்பார்களாம் அடிப்பார்களாம்.
கொஞ்சம் பெரிய பொண்ணானால் என்னுடன் வருவே! கூலி நிறையக்கிடைக்கும்மென்றாள்.
இறுதியாக அமைச்சர் பேசினார்:
இந்நாள் பொன்னாள். உங்களுக்கெல்லாம் நன்னாள்.”
கரகோசம். நானும் கைதட்டினேன். ஏனென்று தெரியவில்லை.
எல்லாரும் செய்தார்கள் எனவே.
ஒருவழியாக முடிந்தது. அனைவரும் சென்றபின்
எம்வரிசை. இறுதியில் எனக்கும் மிட்டாய்.
இன்னொன்று வாங்கினால் அம்மாவுக்கும் கொடுக்கலாமே?\
குரக்கழுதை, சின்ன வயசிலேயே திருட்டுத்தனமா?
வாங்கிய மிட்டாயும் பறிபோயிற்று!
இதைசெய்யாதே கண்ணு
என்று அம்மா செல்லமாகத் திட்டினாள்.
அப்பாவிடம் சொல்லாதே என்று மட்டும் கெஞ்சினேன்.
அம்மா நல்லவள்.
ஏன் செய்தேன் என்று அவளுக்குச் சொல்லவில்லை.
காத்திருக்கிறேன்.
பெரியவளாகி கைநிறையக் கூலி வாங்க.
அப்போ நானே மிட்டாய்கள் வாங்கித்தின்பேன்.
அம்மாவுக்கும் கொடுப்பேன்.

--காவ்யா